போதையால் மாறிய பாதை: மீட்டெடுக்க மறுவாழ்வு மையங்கள் வருமா

கோவை: போதை... ஒருவரது பாதையை தடுமாற்றி கொண்டு போய் விடும். உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில், பெரும்பகுதியை மதுவுக்கென செலவழிப்பதை, ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவால், உழைக்க வழியில்லாமல், உழைத்தபணத்தை வைத்து பிழைக்க வாய்ப்பில்லாமல் திணறி கொண்டிருக்கின்றனர் பல குடும்பத்தினர். அதேநேரம், மதுவுக்கு அடிமையான பலர், மனதளவில் பாதிக்கப்பட்டு, குடிநோயாளிகளாக மாறி போயிருக்கின்றனர் என்பதையும், பல குடும்பத்தில் புலம்பலாக கேட்க முடிகிறது. அதுவும், தொழில்நகரான திருப்பூரில், மதுப்பழக்கம் ஏராளமானோரை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது என்பதை, மறுக்க முடியாது. வருமானத்தின் ஒரு பகுதி, மதுபானக்கடைக்கு சென்றுவிட்ட நிலையில், சேமிப்பு இல்லாததால் பல ஏழை, நடுத்தர குடும்பத்தினர் திக்குமுக்காடி வருகின்றனர்.

அடுத்த வேளை உணவுக்கு அரசின் இனாமையும், அடுத்தவர்களின் தானத்தையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய பரிதாப நிலையை, பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்தவாய்ப்பை பயன்படுத்தி, குடிநோயாளிகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு சமூதாயத்திற்கு உள்ளது என்பதே,சமூக அக்கறையுள்ள பலரின் கருத்து.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: மது அருந்தாததால், பலருக்கு, கைகால்நடுக்கம், கோபம், போன்றவை ஏற்படும். இதனால், அவர்களது குடும்பத்தில், அமைதி, சந்தோஷம், இருக்காது. சிலர் உயிரை கூட மாய்த்து கொள்கின்றனர். மதுபழக்கத்தில் இருந்துவிடுபட விரும்புவோருக்காக ஆங்காங்கே மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. அங்கு, மருத்துவ சிகிச்சையோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய மறுவாழ்வுமையங்கள், நகர்ப்புறங்களில் மட்டுமே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், சமூக அக்கறையுள்ள தன்னார்வ அமைப்புகளும் இணைந்து, குடிநோயாளிகளை மீட்டெடுக்கவும், அவர்களுக்கு, மறுவாழ்வு வழங்கும் மையங்களை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் செயல்படும் மருத்துவமனைகளில், இதற்காக மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Popular posts
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
மல்லிப்பட்டிணத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் திறப்பு விழா
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image
இது தொடர்பாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், விழுப்புரத்தில் கொரோனா பாதித்த 4 பேரும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர்